parthiban
பார்த்திபன் தனது ஒத்த செருப்பு திரைப்படத்தை விளம்பரம் படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.

Parthiban OSHO Challenge goes viral – வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பார்த்திபன். தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஓத்த செருப்பு. இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைபடம் – ரசிகர்களிடையே வைரல்

இந்நிலையில், இப்படத்தை புரமோட் செய்யும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். #OSHO என்கிற ஹேஷ்டேக் அதாவது OTHTHA SERUPPU HAPPENING ONLINE என ஒன்றை உருவாக்கி ஒத்த செருப்பை அணிந்திருப்பதை கிரியேட்டிவாக புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள் என பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பத் துவங்கி விட்டனர்.

அதைக்கண்டு மெர்சல் ஆன பார்த்திபன் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

 

https://platform.twitter.com/widgets.js