ஒத்த செருப்பு திரைப்படத்தை விளம்பரப்படுத்த பார்த்திபனுக்கு ரசிகர் ஒருவர் வித்தியாசமான ஐடியாவை கொடுத்துள்ளார்.

Parthiban accept fan idea to promote oththa seruppu – வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பார்த்திபன். தற்போது அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஓத்த செருப்பு. இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 19 மட்டுமில்ல 22-லும் கொண்டாட்டாட்டம் தான் – தயாரிப்பாளரின் தரமான ட்வீட் இதோ.!

இந்நிலையில், ரசிகர் ஒரு டிவிட் செய்திருந்தார் அதில் ‘சார், என் மனதில் பட்ட சின்ன யோசனை.. அனைவரிடமும் மொபைல் உள்ளது. 20ம் தேதி படம் ரிலீஸ். அதனை விளம்பரப்படுத்த அனைவரும் வரும் 19ம் தேதி வாட்சப் ஸ்டேட்டஸாக வைத்தால் நிச்சயம் அனைவருக்கும் படத்தை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும். இதை தமிழக மக்களுக்கு நீங்க ஒரு வேண்டுகோளாக வையுங்கள் சார்’ எனக் கூறியிருந்தார்.

இதைக்கண்ட பார்த்திபன் ‘நல்ல யோசனை செய்கிறேன்!’ நன்றி என அந்த ரசிகருக்கு பதில் கூறியுள்ளார்.