Parotta Soori in Sun TV Serial

சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் சூரி இணையத்தில் வெளியான புகைப்படம்.

Parotta Soori in Sun TV Serial : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்துகொண்ட காட்சியில் நடித்து பிரபலமானவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து களவாணி, குள்ளநரி கூட்டம், மனம் கொத்தி பறவை, சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற எண்ணற்ற காமெடி திரைப்படங்களில் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

ஆனால் இவர் திரைப்படத்தில் நடிக்கும் முன்பே சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமதி செல்வம் சீரியலில் நடித்துள்ளாராம்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து வருகின்றனர்.