Paris-Paris-Teaser

Paris Paris Teaser : பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் கங்கனா நடிப்பில் வெளியான படம் குயின். இப்படத்தை தற்போது பிரபல நடிகரான ரமேஷ் அரவிந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இயக்கி வருகிறார்.

தமிழில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

காரணம் காஜலின் மார்பகத்தை சக நடிகை அமுக்குவது போல அமைந்திருந்த காட்சி தான். தற்போது இந்த காட்சிக்கான விளக்கத்தை ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது இந்த காட்சி ஹிந்தியிலும் இடம் பெற்றிருந்தது. டீசரில் பார்க்கும் போது தான் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் படத்தில் பார்க்கும் போது பெரியதாக தெரியாது.

இந்த காட்சிக்கு முன்பும் பின்பம் என்ன நடந்தது என படத்தில் பார்த்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here