Paravai Muniyamma Request to TN Government
Paravai Muniyamma Request to TN Government

இறப்பதற்கு முன்பாக பரவை முனியம்மா தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Paravai Muniyamma Request to TN Government : தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பரவை முனியம்மா.

வயது முதிர்வு காரணமாக சில வருடங்களாக ஓய்வில் இருந்து வந்த இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அஜித்தின் அடுத்த படம், போனி கபூருக்கு கோரிக்கை வைக்கும் அஜித் ரசிகர்கள்.!

ஆதரவற்ற இவருக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ரூபாய் 6 லட்சம் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தினார். மேலும் அவருடைய தேவைக்காக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்கி வந்தார்.

இந்த நிலையில் பரவை முனியம்மா அரசாங்கம் எனக்கு கொடுத்த உதவித்தொகையை நான் இறந்த பின்பு மாற்றுத்திறனாளியான என்னுடைய மகனுக்கு அளித்து அவன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பரவை முனியம்மாவின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு நிறைவேற்றுமா? என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.