Paramakudi MLA Tested Corona Positive
Paramakudi MLA Tested Corona Positive

பரமக்குடி அதிமுக எம்எல்ஏ-க்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Paramakudi MLA Tested Corona Positive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. ஏழை, பணக்காரன், செல்வந்தர் என பார்க்காமல் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு அரசியல் பிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த அன்பழகன் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருந்தார்.

ரஜினி, அஜித்தை தொடர்ந்து சூர்யா எடுத்த அதிரடி முடிவு – அருவா நிலைமையில் இப்போ இப்படி ஆயிடுச்சு!

மேலும் அதிமுகவின் அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஊரை சேர்ந்த MLA பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி தொகுதியைச் சார்ந்த எம்எல்ஏ-க்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து தற்போது பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஏ சதன் பிரபாகருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அவருடைய மகன் மற்றும் உதவியாளர்கள் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.