கிருத்திகா உதயநிதி தற்போது இயக்கியிருக்கும் படமான “பேப்பர் ராக்கெட்” திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர்தான் கிருத்திகா உதயநிதி. இவர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலினின மனைவி ஆவார். இவர் கடந்த 2013ல் வெளியான “வணக்கம் சென்னை” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி விஜய் ஆண்டனியை வைத்து “காளி” என்ற படத்தை இயக்கினார்.

கிருத்திகா உதயநிதியின் "பேப்பர் ராக்கெட்" திரைப்படம் - வைரலாகும் ஆடியோ ரிலீஸ் அப்டேட்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் தான் “பேப்பர் ராக்கெட்”. இப்படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க இவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் கௌரி கிஷன், ரேணுகா கருணாகரன், நிர்மல் பலழி, பூர்ணிமா பாக்யராஜ், ஜிஎம் குமார், சின்னி ஜெயந்த், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

கிருத்திகா உதயநிதியின் "பேப்பர் ராக்கெட்" திரைப்படம் - வைரலாகும் ஆடியோ ரிலீஸ் அப்டேட்.

மேலும் இந்த “பேப்பர் ராக்கெட்” திரைப்படம் விரைவில் ஜி5 தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தருண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் முழு பாடல்களின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பேப்பர் ராக்கெட் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் "பேப்பர் ராக்கெட்" திரைப்படம் - வைரலாகும் ஆடியோ ரிலீஸ் அப்டேட்.