Papaya Leaves :
பப்பாளி :
* பப்பாளி மரத்தில் உள்ள பப்பாளி இலை ,பப்பாளி பழம், பப்பாளி காய் ,பால் .இவ்வாறாக பப்பாளி மரத்தின் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணம் கொண்டவை.
பப்பாளி இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் :
* பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் ,கால்சியம் ,பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு சத்து என பல்வேறு அதீத சத்துக்களைக் கொண்ட உயிர் காக்கும் மருந்து தான் இந்த பப்பாளி இலை.
பப்பாளி இலையின் பயன்கள் :
1. இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
2. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு வரப்பிரசாதம் இந்த பப்பாளி இலை.
3. மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்த உதவுகிறது.
4.கல்லீரல் புற்று நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
5. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.
7. ஜீரணத்திற்கு உதவுகிறது.
8. உடலிலுள்ள அலர்ஜி நோயை குணப்படுத்துகிறது.
9. உடலில் உள்ள வைரஸ் ,பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும் ஒரு அருமருந்து.
10. தற்போது மிரட்டி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
பப்பாளி இலை டீ :
* ஒரு லிட்டர் நீரில் பப்பாளி இலை ஒன்றினைப் போட்டு கால் லிட்டராக நீர் சுருங்க வேண்டும்.
*இந்த நீருடன் தேன் கலந்தும் அருந்தலாம்.( உங்கள் விருப்பம்).
* இந்த நீரை மாதத்தில் ஒன்றிலிருந்து இரண்டு முறை அருந்தலாம்.
* இந்த பப்பாளி இலை டீயை அருந்துவதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
* இந்த பப்பாளி இலையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ,இதை மாதம் ஒருமுறையாவது பயன்படுத்துங்கள்.