Papapya Adai Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Papapya Adai Recipe :

தேவையான பொருட்கள்:

பப்பாளிக்காய் துருவல் – அரை கப்,
தேங்காய் துருவல் – அரை கப், வெங்காயம் – 2,
கம்பு மாவு – 2 கப்,
அரிசிமாவு – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு.

அரைப்பதற்கு:

துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி,
முளைகட்டிய சுண்டல் – ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறுதுண்டு,
பட்டை, கிராம்பு – 2,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முகத்தில் அம்மைத் தழும்புகள் விரைவாக மறைய வேண்டுமா?. இதோ சில டிப்ஸ்!

1) ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

2) இதனுடன் எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சாமான்களையும் கலந்து, தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைக்கவும்.

3) தோசைக் கல்லைக் காயவைத்து மெல்லிய அடையாக ஊற்றி, எடுக்கவும்.

4) ஆரோக்கியமான பப்பாளி அடை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here