பாபநாசம் 2 படத்தில் கவுதமிக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Papanasam 2 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பாபநாசம்.

பாபநாசம் 2 படத்தில் கவுதமி இல்லை.. கமலுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் தெரியுமா??

மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரிமேக்காக இப்படம் உருவாகி இருந்தது. கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருந்தார். மலையாளத்தில் திரிஷ்யம் 2 வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் பாபநாசம் 2 உருவாக உள்ளது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்க போவதில்லை எனவும் அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.