Panneer Coconut Laddu

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 250 கிராம், பொடித்த சர்க்கரை – 4 கப்,
ரோஸ் எஸன்ஸ் – சில துளிகள், தேங்காய் – 1 மூடி,
சர்க்கரை – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:

1) பனீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசன்ஸ் சேர்த்து பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
2) தேங்காயை துருவி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும் சர்க்கரை உருகி இளகி, சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கி விட வேண்டும்.
3) அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும், சிறிது எடுத்து கிண்ணம் போல செய்து அதனுள் பனீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி உருட்டி ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here