Paneer Avarakkai kurma : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Paneer Avarakkai kurma :

தேவையான பொருட்கள்:

பன்னீர் – அரை கப்,
அவரைக்காய் – அரை கப்,
பாதாம் – 6,
எண்ணெய் – தேவையான அளவு,
வெங்காயம் – 4,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 10 பல்,
பிரிஞ்சி இலை – 1,
பட்டை – 2,
லவங்கம் – 2,
ஏலக்காய் – 2,
தயிர் – கால் கப்,
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவைகேற்ப.

செய்முறை:

1) கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

2) வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

பலருக்கும் பேவரைட்டான பால் கோவா செய்வோமா?

3) அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்து
பின், அரைத்த விழுது மற்றும் பாதாம் விழுது சேர்த்து வதக்கவும்.

4) பிறகு, நறுக்கிய அவரைக்காய், பன்னீர், தயிர், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here