சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்கப் போவதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Pandiraj Clarify on Rajinikanth Movie : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையமைத்திருந்தார்.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறேனா? என்னங்க சொல்றிங்க - சூப்பர் ஹிட் இயக்குனர் அளித்த அதிரடி விளக்கம்

படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கலக்கி வந்தது. ஆனால் சென்னையில் பெய்யத் தொடங்கிய தொடர் கனமழை காரணமாக இந்த படத்தின் வசூல் அப்படியே நின்றுபோனது. இதனால் படக்குழுவினருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை ஈடுகட்ட ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இதுவும் பக்கா கிராமத்து கதை எனவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாண்டிராஜ்.

Vascodagama பட பூஜையில் தயாரிப்பாளர் காலில் விழுந்த நடிகர் Nakul | K.Rajan | HD

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறேனா? என்னங்க சொல்றிங்க - சூப்பர் ஹிட் இயக்குனர் அளித்த அதிரடி விளக்கம்

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நான் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. நான் ரஜினிகாந்த் சாரை சந்தித்து எந்த கதையையும் கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இதன் காரணமாக இவர் அடுத்ததாக ரஜினியை இயக்குகிறார் என வதந்தி கிளம்பி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.