Pandiraj About Suriya40 Title

மாஸான டைட்டிலில் சூர்யா 40 திரைப்படம் இருக்கும் என இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

Pandiraj About Suriya40 Title : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர். வேலு சூர்யா 40 திரைப்படம் குறித்து கேட்டதற்கு இதுவரை 35 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து இருப்பதாகவும் விரைவில் மீதி படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் டைட்டில் செம மாஸாக இருக்கும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். படத்தின் டைட்டில் ஜூலை மாதத்தில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.