சூர்யா 40 படம் எப்படி இருக்கும் என சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

Pandiraj About Suriya40 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்க சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

சூர்யா40 படம் எப்படி இருக்கும்? சூப்பரான தகவலை வெளியிட்டு சிலாகித்துக் கொண்ட இயக்குனர் பாண்டிராஜ்.!!

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பக்கா கிராமத்து கதையில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இருந்து சூர்யாவின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டியராஜன் சூர்யா 40 குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை கார்த்தி ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதேபோல் சூர்யா 40 படத்தையும் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு மூமொண்டையும் என்ஜாய் செய்து ரசிப்பார்கள்.

கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய போது கூட சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தில் அப்டேட்டை கேட்டுக்கொண்டே இருந்தார்கள் என சிலாகித்துக் கொண்டுள்ளார்.