Pandiraj About SK16 | Sivakarthikeyan | Aishwarya Rajesh | Anu enamel | sun Pictures | Rk.Suresh | Soori | D.IMMAN | Yogi Babu

Pandiraj About SK16 :

தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க.

கடைசியா பாண்டிராஜ் இயக்கத்தில வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் கிராமத்த மையப்படுத்தி பெரியளவில வெற்றிபெற்றிருந்த நிலையில இந்த படமும் அதே பாணியில உருவாகவிருக்கிறதா சொல்லப்படுது.

அதோடு இப்படம் குடும்ப உறவுகளை ஒன்றாக திரையில் பார்த்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் பாண்டிராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.