ஒரே கதையை வைத்து ஒளிபரப்பாகும் மூன்று விஜய் டிவி சீரியல்களை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் இந்த சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்களும் அதிக அளவில் இருந்து வருகின்றனர்.

இந்த வகையில் ஒரே மாதிரியான கதையை வைத்து மூன்று சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் வசு தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டார் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா டான்ஸ் ஆடி கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவைகளை தொடர்ந்து மூன்றாவது சீரியலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி பால் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார். ராதிகா அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.

இப்படி மூன்று சீரியல்களிலும் வழுக்கி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிப்பது போன்று ஒரே மாதிரியான காட்சிகள் இடம்பெற்று இருப்பதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா தன்னுடைய அம்மா பாக்கியவை எழுந்து நடக்க வைப்பதற்காக சாரிலிருந்து கீழே விழுந்தது போல் நடித்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.