கண்ணன், ஐஸ்வர்யாவை கடைக்கு அழைத்து அதிர்ச்சி கொடுக்கிறார் மீனாவின் அப்பா ஜனார்த்தனன்.

Pandian Stores Update 08.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நேற்று கண்ணன் கடை கடையாக ஏறி வேலை தேடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிர் ஜீவாவிடம் கூறி வருத்தப்பட்டார். பின்னர் அங்கு வந்த ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனிடம் கண்ணனுக்கு வேலை போட்டு தர முடியுமா என கேட்டனர்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

இவர்களிடம் முடியாது என கூறிவிட்டு ஜனார்த்தனன் கிளம்பிவிட்டார். இதனையடுத்து வீட்டுக்குப் போன ஜீவா மீனாவிடம் அப்பாகிட்ட பேசி வேலை வாங்கி தரமுடியுமா எனக் கேட்டார். பின்னர் மீனா அவருடைய அப்பாவுக்கு போன் செய்து கண்ணனுக்கு வேலை போட்டு தருமாறு கேட்டார். முடியாது எனக் கூறிய ஜனார்த்தனன் பின்னர் மீனா தொடர்ந்து வற்புறுத்தியதால் சம்மதம் தெரிவித்தார். கண்ணன் ஏதாவது தவறு செய்தால் அதற்கு மாப்பிள்ளை தான் பொறுப்பு எனவும் கூறி விட்டார்.

அதை பிறகு கிச்சனில் முல்லை மீனா மற்றும் தனம் ஆகியோர் பருப்பு குழம்பு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் தனம் கண்ணனைப் பற்றி பேசி வருத்தப்படுகிறார். அப்போது மீனா கண்ணனுக்கு எங்க சூப்பர் மார்க்கெட்டில் வேலை போட்டு தர சொல்லி இருக்கேன் என கூறுகிறார். படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போறான் என வருத்தப்பட்டார்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்!

இதனையடுத்து ஜனார்த்தனன் தன்னுடைய கடையின் மேனேஜர் வை கண்ணன் வீட்டுக்கு அனுப்பி கடைக்கு அழைத்து வருமாறு கூறினார். கண்ணன் வீட்டுக்கு போன கடை மேனேஜர் இருவரையும் அழைத்து வந்தார். எதற்கு கூப்பிட்டது காரணம் தெரியாமல் குழப்பத்தோடு வந்தனர் இருவரும்.

முதலில் கண்ணனை திட்டிய ஜனார்த்தனன் அதன்பின்னர் ஐஸ்வர்யாவை பார்த்து நீ இவனை ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்ல ஆசை வார்த்தை கூறி கல்யாணம் பண்ணிகிட்டானா என கேட்கிறார். எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா. உனக்கு புடிக்கலைன்னா உன்ன கூட்டிட்டு போய் உங்க வீட்டுல விட்டுறேன். என்ன ரெண்டு அடி அடிப்பாங்க அதுக்கப்புறம் நம்ம பொண்ணுங்ககிட்ட வந்துடுச்சுன்னு ஏத்துப்பாங்க என கூறுகிறார். ஜனார்த்தனன் இவ்வாறு பேசியது கண்ணன் ஐஸ்வர்யா இருவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.