மளிகை பொருள் டெலிவரி செய்யப்போன இடத்தில் கண்ணணால் கதிருக்கு ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி.

Pandian Stores Update 07.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். அதில் உள்ள மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு ஒரு அளவிற்கு இடம் அவன் தெரிகிறார். அவர் தூக்கம் வராமல் அமர்த்திக் கொண்டு இருந்ததால் அவரது பக்கத்திலேயே அமர்ந்து பார்த்துக் கொள்கிறார் முல்லை. பின்னர் கதிரும் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொள்கிறார்.

விக்கெட் 100 : கபில்தேவ் சாதனையை முறியடித்தார் பும்ரா..

மளிகை பொருள் டெலிவரி செய்யப் போன இடத்தில் கண்ணனால் கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

ஜீவாவுக்கும் குழந்தை இருக்கு மூர்த்திக்கும் குழந்தை பிறக்கப் போகுது நீங்களும் ஒரு குழந்தைய பெத்து கொடுங்க. நான் சாகுறதுக்குள்ள பார்த்திட்டா சந்தோஷமா இருக்கும் என கூறுகிறார். இப்ப குழந்தைக்கு என்ன அவசரம் என கூறிய கதிர் முல்லை பின்னர் அம்மாவின் ஆசைக்காக சரி என ஒப்புக் கொள்கின்றனர்.

எனக்கு ஒரு பயம் இருந்தது! – Music Director Ghibran Speech At JANGO Audio Launch

இன்னொருபுறம் கண்ணன் ஐஸ்வர்யாவை காலேஜுக்கு அனுப்பிவிட்டு கடை கடையாக ஏறி இறங்கி வேலை கேட்கிறார். எல்லா கடையிலும் வேலை இல்லை என சொல்லி அனுப்பப்படுகிறார். இந்த நிலையில் கதிர் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஹோட்டல் ஒன்றிற்கு செல்கிறார். அந்த ஹோட்டலில் கதிர் இருப்பது தெரியாமல் கண்ணனும் சென்று உரிமையாளரிடம் வேலை கேட்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் பரவால்ல டேபிள் துடைக்க, பாத்திரம் கழுவுவது என எதுவாக இருந்தாலும் செய்யத் தயார் என வேலை கேட்கிறார். கடைக்காரர் வேலை எல்லாம் இல்ல சமைக்க தெரிந்தா மட்டும் தான் இங்க வேலை என கூறுகிறார். அதன் பிறகு ஹோட்டல் உரிமையாளர் கதிரிடம் போகும்போது பாக்கியை வாங்கிட்டுப் போயிடு என கூறுகிறார்.

அப்போது கதிரை பார்த்த கண்ணன் இங்கிருந்து விறுவிறுவென வெளியே சென்றுவிடுகிறார் ‌‌‌‌. பின்னர் கண்ணனின் நிலைமையை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ஜீவா இதனைப் பார்த்து என்ன என்று கேட்கிறார். முதலில் சொல்லத் தயங்கிய கதிர் அதன் பின்னர் கண்ணன் இப்படி கடை கடையாய் ஏறி வேலை கேட்டுட்டு இருக்கான். உங்கள மாதிரி கஷ்டப்படக்கூடாது அவனாவது நல்லா படிக்கணும் என எதிர்பார்க்கிறோம் என கூறி வருத்தப்படுகிறார் கதிர். கண்ணனின் நிலைமையை பார்த்து ஜீவாவும் கண்ணீர் வடிக்கிறார்.

இந்த நிலையில் ஜீவாவின் மாமனார் இவர்களை பார்ப்பதற்காக வருகிறார். அப்போது சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்கொள்ள ஆள் அனுப்புகிறேன் என்று சொன்னீர்களே என்ன ஆச்சு மாப்பிள்ளை என ஜீவாவிடம் கேட்கிறார். அவன் ஊருக்கு போய்ட்டா மாமா என ஜீவா கூறுகிறார். மேலே நான் வேற ஒரு ஆள் அனுப்புகிறேன் என ஜீவா கூற அதன் பின்னர் அவருடைய மாமனார் அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த நிலையில் கதிர் அவரை மீண்டும் அழைத்து ஒரு உதவி செய்ய முடியுமா? எனக்கேட்க உதவினு எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க என்னன்னு சொல்லுங்க மாப்பிள்ளை ஜீவாவின் மாமனார் கேட்கிறார். இந்த சூப்பர் மார்க்கெட் வேலைய கண்ணனுக்கு கொடுக்க முடியுமா? என கதிர் கேட்க இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.