Pandian Stores Telecast Time Update
Pandian Stores Telecast Time Update

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது.

Pandian Stores Telecast Time Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பத்தில் திறமைகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சூரரைப் போற்று படத்தின் ரன்னிங் டைம் என்ன தெரியுமா? வெளியானது செம அப்டேட்!

இதுபோன்ற குடும்பங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் கதைகளை தொடர்ந்து உருவாக்குமாறு ரசிகர்கள் விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியல் இந்த வாரத்தோடு நிறைவு பெறவுள்ளது. இதனால் அந்த நேரத்தோடு சேர்த்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பு நேரத்தை ஒரு மணி நேரமாக அதிகரிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

Hema Clarification About Pandian Stores Serial

இதனால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து ஒரு மணிநேரம் சீரியல் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் தொடரும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.