Pandian Stores Sujitha in Modern Costume

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதாவின் மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Pandian Stores Sujitha in Modern Costume : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தை பற்றிய கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு பெருமைகளைப் பெற்ற இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு சீரியல்களில் நாயகியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாக்கியராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நூறு நாட்களை கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்த இந்த முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் மகனாக வரும் குழந்தையின் இவர்தான். தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அந்த புகைப்படம் கூட சில தினங்களுக்கு முன்னர்தான் இணையத்தில் தீயாக பரவியது.

இதனையடுத்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சுஜிதாவா இது மாடர்ன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார் என ரசிகர்களிடம் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி வருகிறது. இதோ பாருங்க