பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மாவாக நடித்து வருபவர் நிஜ மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Pandian Stores Sri Vidhya With Daughter : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு பிரபலத்துக்கும் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா அம்மாவின் நிஜ மகளை பார்த்து இருக்கிறீர்களா? இவர் தான் அது - வைரலாகும் போட்டோ

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா சதீஷ். இவரின் அம்மாவாக நடித்து வருபவர் ஸ்ரீவித்யா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி என பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித் திரையிலும் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய மகள் எத்திராஜ் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா அம்மாவின் நிஜ மகளை பார்த்து இருக்கிறீர்களா? இவர் தான் அது - வைரலாகும் போட்டோ

அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இவ்வளவு அழகான மகளா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்