Pandian Stores Serial Remake in Hindi

பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய பெருமை ஒன்று கிடைத்துள்ளது.

Pandian Stores Serial Remake in Hindi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சில வாரங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவருக்கு பதிலாக காவியா இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

சித்ராவின் இறப்பு ரசிகர்களுக்கு இன்னும் மீள முடியாத சோகமாகவே இருந்து வருகிறது.

இது ஒரு புறமிருக்க தற்போது வெளியாகியுள்ள மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் இந்த சீரியலை இந்தியில் ரீமேக் செய்து ஒளிபரப்ப பிரபல தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

தமிழ் சீரியல் முதல் முறையாக ஹிந்தியில் ரீமேக்காவது இதுவே முதல் முறை என்பதால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.