பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துடன் திருவள்ளூரில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு பங்கேற்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்களிடம் ஒரு வாரமாக அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி திருவள்ளூரில் செப்டம்பர் 21ஆம் தேதி 2024 மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இடம் :திருவள்ளூர் வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி. குறிப்பாக அனுமதி இலவசம்
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. நிகழ்ச்சியின் பட்டியல் இதோ..
மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் ஊக்கமளிக்கக்கூடிய பெண்கள் சார்ந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
ஆறு மணியிலிருந்து ஆறு 45 மணி வரை கூட்டுக் குடும்பம் vs தனி குடும்பம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்க இருக்கிறது.
இரவு 7: 00 PM மணியிலிருந்து 9:00 PM மணி வரை விஜய் டிவி நட்சத்திரங்களுடன் கொண்டாட்டங்களும் கே பி ஒய் சாம்பியன்ஸ் களின் காமெடிகளும் அட்டகாசமான பாடல்களும் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து :ஸ்டாலின், நிரோஷா, சரண்யா, வெங்கட், ஹேமா, ஷாலினி, ஆகாஷ், போன்றவர்களும்,.
கே.பி.ஒய் குழுவில் : நாஞ்சில் விஜயன் ,திவாகர், யோகி, அமுதவாணன், பழனி பட்டாளம் கலந்து கொள்கின்றனர்.
பட்டிமன்றம் நிகழ்ச்சிக்கு : மதுரை முத்து, நா.முத்துக்குமார், நாகமுத்து, அன்ன பாரதி கலந்து கொள்ள உள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் : ஸ்ரீநிதா விக்னேஷ் ரிச்சா மற்றும் அனன்யா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
திருவள்ளூரில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த நட்சத்திர கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.