எல்லோரும் கயலை மறந்துட்டீங்க என பிரச்சினையை மீனா ஒரு பக்கம் கிளப்ப இன்னொரு பக்கம் கதிரிடம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என கூறுகிறார் முல்லை.

Pandian Stores Serial Episode Update 21.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். எல்லோரும் தனத்தின் குழந்தையை கொஞ்சுவதாகவும் கயலை மறந்து விட்டதாகவும் மீனா ஜீவாவிடம் கூறுகிறார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என ஜீவா கூறி அதனை மீனா ஏற்கவில்லை. இன்னைக்கு எல்லாம் கயலை யாருமே தூக்கல என கூறுகிறார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

அதன்பிறகு கயலை ஜீவா கொஞ்ச தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள உடனே பாட்டு பாடி தூங்க வைக்கிறார். இந்த பக்கம் முல்லை கதிரிடம் ஒரு விஷயம் சொல்லணும் என சொல்லி அதன் பிறகு ஒன்றும் இல்லை எனக் கூறி விடுகிறார். என்ன சொல்லு சொல்லு என்ன கதிர் கேட்டும் முல்லை சொல்ல மறுக்கிறார். அதன் பிறகு படுத்து தூங்குங்க எனக்கூறிவிட்டு குட்நைட் என சொல்லி விடுகிறார். கொஞ்ச நேரம் கழிச்சு நாம குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என கேட்கிறார். அதுக்கு எதுக்கு வெட்கம் என் கிட்ட தானே கேக்குற என கதிர் கேட்க உங்ககிட்ட பேசினா மட்டும் மட்டும் வெட்கம் போகவே மாட்டேங்குது என கூறுகிறார்.

மறுநாள் காலையில் அனைவரும் தனத்தின் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மீனா வந்து குழந்தையை தூக்கி சென்று நான் குளிக்க வைக்கிறேன் நீங்க ஓய்வு எடுங்கள் என தனத்திடம் கூறுகிறார். இந்த வீட்டில் குழந்தையை வளர்ப்பதில் மீனா தான் சீனியர் ஜீவா கூற யார் இல்லைன்னு சொன்னா என தனம் செல்கிறார்.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர் Saran பேட்டி 

அதன்பிறகு கதிர் கடை கட்டும் இடத்தில் செங்கல் எடுத்துக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார் முல்லை. முல்லையை பார்த்ததும் இருந்த பெண்மணி ஒருவர் கதிரிடம் இது யாரு உன்னுடைய தங்கச்சியா என கேட்கிறார். கதிர் சிரிக்க முல்லைக்கு கோபம் வருகிறது. நான் அவருக்கு தங்கச்சி ஒன்னும் இல்லை எனக் கூற அப்போ அக்காவா என கேட்கிறார். அதன்பிறகு அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் வேறொருவர் அந்த அம்மா அவரோட சம்சாரம் என கூறுகிறார். தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சா என அந்தப் பெண்மணி சொல்ல ஏன் ஆகலனா பொண்ணு பார்க்கப் போறீங்களா என முல்லை கேட்கிறார். அவங்க விளையாட்டுக்கு தான் சொன்னாங்க, விடு என முல்லையை சமாதானம் செய்கிறார் கதிர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.