எல்லாரும் கயலை மறந்துட்டாங்க என மீனா புலம்ப, வீட்டில் புது பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pandian Stores Serial Episode Update 20.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனத்தின் குழந்தையை பார்க்க மீனாவின் அப்பா அம்மா வீட்டிற்கு வருகின்றனர். குழந்தைக்கு தங்க நாணயத்தையும் பணத்தையும் கொடுக்கின்றனர். குழந்தை தனத்தை போலவே இருப்பதாக கூறுகின்றனர். சைடு கேப்பில் மூர்த்தி ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை, தனம் தான் அழகு என கஸ்தூரி கலாய்க்கிறார்.

எல்லாரும் கயலை மறந்துட்டாங்க, புலம்பும் மீனா.. முல்லையை குழந்தை பெற்று கொள்ள சொல்லும் கஸ்தூரி.. குடும்பத்தில் வெடிக்கப்போகும் புது பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

முல்லை அனைவர்க்கும் காப்பி போட்டு கொடுக்கிறார். முல்லையை எப்போது குழந்தை பெற்று கொள்ள போகிற என கேட்கின்றனர். முல்லை எதுவும் சொல்லாமல் இருக்கிறார். மீனாவின் அம்மா சம்மந்தி அம்மா இறந்தது பற்றி வருத்தத்துடன் கூற அனைவரும் இதை பற்றி பேசுகின்றனர். இந்த நேரத்துல கஸ்தூரி போன உயிரை பற்றி வருத்தப்படாமல் உங்க வாரிசை நினைத்து சந்தோஷப்படுங்க என கூறுகிறார்.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD

அதன் பின்னர் கயலை எங்கப்பா தூக்கிட்டு போகட்டுமா என கேட்டார் என்று கூற மீனா என்னால கயல் இல்லாமல் இருக்க முடியாதுனு அனுப்பல என கூறுகிறார். நாங்க மட்டும் எப்படி கயல் இல்லாமல் இருப்போம்னு மூர்த்தி கூறி விட்டு கடைக்கு கிளம்புகிறார். இந்த நேரத்தில் முல்லையின் அப்பா அம்மா குழந்தையை பார்க்க வருகின்றனர்.

முல்லையின் அம்மா குழந்தையை கொஞ்சி விட்டு கஸ்தூரி நீயும் இங்கதா இருக்கியா என கேட்க நாத்தனார் குழந்தை பெத்து இருக்கா நான் இங்க இல்லனா உலகம் தப்பா சொல்லாதா என சொல்ல அனைவரும் கஸ்தூரியை கலாய்க்கின்றனர். முதல் பேரன் என தனத்தின் மகனை சொல்ல அப்போ கயலு என மீனா கேட்க அவ முதல் பேத்தி என கூறுகின்றனர்.

முல்லையின் அப்பா அக்கா இல்லாதது பற்றி பேச மூர்த்தி கஷ்டப்படுகிறார். இப்படியெல்லாம் நடக்கும்னு விதி என முல்லையின் அம்மா கூறி விட்டு குழந்தைக்கு எடுத்து வந்த நகையை கொடுக்கின்றனர். குழந்தை தனம் போலவே இருப்பதாக கூறுகின்றனர். கஸ்தூரி தனத்தின் குழந்தை கயலை விட நல்ல கலர் என கூற மீனாவின் முகம் சுருங்குகிறது.

மல்லி கொடுத்த காசுல நகை வாங்கி போட்டு இருப்பாங்க என கஸ்தூரி கூற எங்க நிலைமை ஒன்னும் அவ்ளளவு மோசமாக இல்ல என கூறுகிறார். பின்னர் முல்லையிடம் எப்போ குழந்தை பெத்துக்க போற என கூற முல்லையின் அம்மாவும் குழந்தை பெத்துக்க சொல்கிறார். பெத்துக்கலாம் என முல்லை கூற கஸ்தூரி உடம்புல ஏதாச்சும் பிரச்சனையா என கேட்க நீங்க எதுவும் கற்பனை பண்ணாதீங்கனு சொல்ல சீக்கிரம் குழந்தை பெத்துக்கங்க என கஸ்தூரியும் முல்லை அம்மாவும் கூறுகின்றனர். குழந்தை பெத்துக்காமல் இருக்கிறது பைத்தியக்கார தனம் என கூறுகின்றனர். உன்னோட வளைகாப்பை பார்க்கணும்னு ஆசை இருக்கு என கூறுகின்றனர். வீட்ல ரெண்டு குழந்தையை பார்க்கும் போது உனக்குன்னு ஆசை இல்லையானு கேட்க அதெல்லாம் இருக்குனு முல்லை கூறுகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்த நகர்ந்த முல்லையை எங்கடி போற குழந்தையை பெத்துக்கவா என கஸ்தூரி கலாய்க்கிறார். பின்னர் கதிர் அண்ணியின் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். 4 ரவுடிகளை ஒண்ணா அடிக்கிற ஆள் நீங்க குழந்தையை தூக்க பயப்படுகிறீங்க என மீனா கூற முல்லைக்கு கோபம் வந்து விடுகிறது. தனம் சமாதானம் செய்கிறார். குழந்தை யார் மாதிரி இருக்குனு என்ற பேச்சு கிளம்புகிறது. இப்படியே கலகலப்பாக வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம் கயல் இவனை குறுகுறுன்னு பார்க்கிறா, தம்பின்னு சொன்னா சிரிக்குற. குழந்தையை தூக்கி வச்சிட்டு இருந்தா கயலுக்கு கோபம் வருது. குழந்தையை தூக்கவே விடமாட்றா என தனம் கூறுகிறார். மீனா கயலிடம் உன்னை மறந்துட்டாங்க, யாருமே உன்னை கண்டுக்க மாட்றாங்க என வழக்கம் போல நடப்பதை தப்பா புரிந்து கொள்கிறார். இத்துடன் முடிகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்.