பிரசவ வலியில் துடித்த தனத்திற்கு கண்ணன் உதவிய நிலையில் அழகிய ஆண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் தனம்.

Pandian Stores Serial Episode Update 16.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மீனா கயல் பாப்பாவிற்கு தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு கிளம்பியதை அடுத்து முல்லை கதிருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கடைக்கு கிளம்பினார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

பிரசவ வலியில் துடித்த தனத்திற்கு உதவிய கண்ணன்.. கடைசியில் என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்.!!

கண்ணனும் கடைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் பக்கம் தனத்தின் அம்மா வீட்டில் யாரும் இல்லை இந்த நேரத்தில் பிரசவ வலி வந்தால் என்ன செய்வது என புலம்பிக் கொண்டிருக்கிறார். நீ மாப்பிள்ளைக்கு போனை போட்டு வர சொல்லு என கூறுகிறார். எதுக்குமா இப்படி பாக்குற என பேசிய தனம் சும்மா தனக்கு பிரசவ வலி வந்தது போல நடிக்கிறார். உடனே அவருடைய அம்மா பதறிப் போகிறார். அதன் பிறகு எனக்கு வலி எல்லாம் வரல சும்மாதான் நடிச்சேன் என கூறுகிறார். அதன்பிறகு உண்மையாகவே தனத்திற்கு பிரசவ வலி வந்துவிடுகிறது. வலியில் அவர் துடிக்க மூர்த்திக்கு போன் செய்கிறார் தனத்தின் அம்மா. ஆனால் அவர் போனை எடுக்காத காரணத்தினால் என்ன செய்வது என தெரியாமல் வெளியே ஓடி வருகிறார். அப்போது கண்ணன் வீட்டில் இருந்து வெளியே வர உடனே கண்ணனிடம் தனத்திற்கு வலி வந்துவிட்டது ஓடி வா என அழைக்கிறார். உடனே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஒடி செல்கின்றனர்.

Thalaivar ரஜினி Sir Style-ல யாராலும் அடிச்சுக்க முடியாது..! | Annaatthe Teaser

அதன்பிறகு கண்ணன் ஓடிச்சென்று ஆட்டோவை பிடித்து வருகிறார். தனத்தை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு சென்றதும் டாக்டர் தனத்திற்கு இன்று குழந்தை பிறந்து விடும் என கூறி ஊசி போட்டுவிட்டு நடக்கச் சொல்கிறார். வெளியில் கண்ணன் நின்றுகொண்டிருக்க உள்ளே வலியில் துடிக்கிறார் தனம். பிறகு அண்ணன்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்த கதிருக்கு போன் செய்கிறார். தனம் அன்னிக்கு வலி வந்துவிட்டது மருத்துவமனைக்கு கூட்டி வந்து இருக்கேன் என கூறுகிறார். அண்ணனுக்கும் தகவல் சொல்லி கூட்டிட்டு வா என சொல்கிறார் கண்ணன்.

வீட்டிற்கு வெளியே ஐஸ்வர்யா நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் ஜீவா மற்றும் மீனா வர அவர்களிடம் தனம் அக்காவிற்கு வலி வந்துவிட்டது கண்ணன் ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று இருக்கிறான் என கூற அவர்களும் மருத்துவமனைக்கு கிளம்புகின்றனர். எல்லோரும் மருத்துவமனையில் இருக்க மூர்த்தி வந்தவுடன் உள்ளே சென்று தனத்திற்கு ஆறுதல் கூறுகிறார். டாக்டர் அனைவரையும் வெளியே இருக்குமாறு அனுப்பி வைத்துவிட வலியில் துடித்த தனம் ஒரு வழியாக குழந்தையை பெற்றெடுக்கிறார்.

அதன்பிறகு நர்ஸ் வெளியே வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அம்மாவும் குழந்தையும் நலமாக இருப்பதாக கூறுகிறார். இதனால் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.