மூர்த்தியிடம் மீனாவை கோர்த்து விட்டுள்ளார் முல்லை.

Pandian Stores Serial Episode Update 15.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முல்லையும் மீனாவும் ஏற்கனவே போட்டுக் கொண்டு சண்டை தனத்தின் முன்பு மீண்டும் தொடர்கிறது. என்ன பிரச்சனை என்ன எது எனக் கேட்க நான் சொல்கிறேன் என முல்லை தொடங்க அந்த நேரத்தில் மூர்த்தி வந்து விடுகிறார். இதனால் இதனை அப்படியே நிறுத்தி விடுகின்றனர்.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

அதன் பின்னர் முல்லை மீனா செய்த வேலையை மூர்த்தியிடம் போட்டு கொடுக்கிறார். பின்னர் கயல் பாப்பாவால் இருவரும் சமாதானம் ஆகி விடுகின்றனர். அதன் பின்னர் கடைக்கான பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்த தனம் கண்ணனுக்கு விஷயத்தை தெரியப்படுத்த பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுக்குமாறு முல்லையிடம் கொடுத்து அனுப்புகிறார். கொடுக்கும்போதே அழுத்தமாக ஒரு வீட்டை விடாமல் எல்லோருக்கும் கொடு என கூறி அனுப்புகிறார்.

முல்லை கொடுத்து விட்டு வந்ததும் எல்லோருக்கும் கொடுத்தயா என கேட்கிறார். கண்ணன் வீட்டுக்கு கொடுக்காததை புரிந்து கொண்டதனால் ஒரு டிபன் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்குள் முல்லையில் ஜீவாவும் கண்ணனுக்கு கொடுக்கத்தான் பாயாசம் செய்தார்கள் என பேசிக் கொள்கின்றனர். அதன் பின்னர் முல்லை கண்ணனுக்கு பாயாசம் கொடுத்து விட்டு வருகிறார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் என்னதான் கண்ணன் தப்பு செய்திருந்தாலும் அவனோட அண்ணிகளுக்கு அவ மேல இருக்க பாசம் குறையல என பேசிக் கொள்கின்றனர்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..!

அதன் பின்னர் வீட்டில் ஜீவா தனத்தின் அம்மாவுடன் சேர்ந்து துணி மடித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த மீனா போலாமா என ஜீவாவிடம் கேட்கிறார். எங்கே எது என கேட்கிறார் ஜீவா. இன்னைக்கு கயல் பாப்பாவுக்கு தடுப்பூசி போடணும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன்னு சொன்னேன்ல மறந்திட்டியா என கோபப்படுகிறார் மீனா. அதன் பின்னர் தனம் கூட்டிட்டு போ என கூற மூவரும் கிளம்பிச் செல்கின்றனர். அதன்பிறகு தனம் எதையோ அதிர்ச்சியுடன் பார்க்க அத்துடன் முடிகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.