கயலை கண்ணன் தூக்கி செல்ல பின்னர் மீனா ஐஸ்வர்யாவுடன் பேச முல்லைக்கும் மீனாவுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.

Pandian Stores Serial Episode Update 14.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கயலை தூக்கி சென்ற கண்ணன் வெளியில் கொண்டு சென்று கொஞ்சிக் கொண்டு இருக்கிறார். மீனாவும் தனமும் கண்ணனிடம் கயிலை எப்படி கேட்பது என்று தெரியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்த நேரத்தில் மூர்த்தி வந்துவிடுகிறார். மூர்த்தியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் கண்ணன் கயலை மீனாவிடம் கொடுத்துவிட்டு பாப்பா அழுதது அதனால் தான் தூக்கிட்டு போனேன் என கூறுகிறார்.

கயலை தூக்கி சென்ற கண்ணன்.. முல்லைக்கும் மீனாவுக்கும் இடையே வெடித்த மோதல் - பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்
மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

பின்னர் மூர்த்தி வீட்டில் இத்தனை பேர் இருக்க கயலை உங்களால பார்த்துக்க முடியாதா? கதவைத் திறந்து போட்டுட்டு அப்படி என்ன வேலை செய்றீங்க எனத் திட்டினார். பின்னர் தனமும் கதவைத் திறந்து போட்டுட்டு பின்னாடி எதற்கு போன. இதுவே நம்ப கண்ணன் தூக்கிட்டு போனதுனால பிரச்சினை இல்ல வேற யாராச்சும் வந்திருந்தா என்ன செய்வது? எனக் கூறிவிட்டு உள்ளே செல்கிறார். பின்னர் மீனா கயல் பாபாவிடம் ஏண்டி நீ தூங்க வேண்டியது தானே அதனால பாரு எல்லார்கிட்டயும் நான் திட்டு வாங்கினேன் என கூறுகிறார். இதனைக் கேட்ட தனம் இப்ப எதுக்கு கயலை திட்டுற என பாப்பாவை வாங்கிக் கொள்கிறார்.

என்னோட அப்பா அந்த கல்யாணத்துக்கு Okey சொல்லல – Sanchita Shetty Emotional Speech..!

பின்னர் மதியத்தில் முல்லை கதிருக்கும் ஜீவாவுக்கும் சாப்பாடு கொண்டு செல்கிறார். நாளையிலிருந்து நானும் உங்களோட இங்க வருகிறேன் என கூறுகிறார். கதிர் வேண்டாம் என கூற ஜீவா அந்தப் புள்ள தான் உன்னோட இருக்கணும்னு ஆசைப்பட்டேன் வரட்டுமே என கூறுகிறார். அப்படினா நாளையிலிருந்து நீ சின்ன அண்ணியை கூட்டிட்டு கடைக்கு போ என கதிர் கூறுகிறார். எப்படி கோர்த்து விடுறான் பாத்தியா என ஜீவா கூறுகிறார்.

அதன் பின்னர் மறுநாள் காலையில் ஐஸ்வர்யா கோலம் போட்டு கொண்டிருக்கிறார். மீனாவும் கோலம் போடப் போன போது ஐஸ்வர்யாவின் கோலத்தைப் பார்த்து விட்டு எத்தனை புள்ளி என எண்ணுகிறார். 7 புள்ளி ஐஸ்வர்யா பதில் சொல்ல அதன் பின்னர் இருவரும் மாறி மாறி பேசிக்கொள்கின்றனர். இந்த நேரத்தில் முல்லை வந்துவிடுகிறார். அதன் பின்னர் ஐஸ்வர்யா அப்படியே வீட்டிற்குள் ஓடி விடுகிறார்.

மீனா கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்ததும் முல்லை எதுக்கு நீங்க அவ கிட்ட பேசிட்டு இருக்கீங்க. வீட்ல இருக்க பிரச்சனை போதாதா என கூறுகிறார். இப்ப எதுக்கு என்னை நிற்க வைத்து விட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என மீனா கோபப்படுகிறார். இருவரும் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்து ஜீவாவும் கதிரும் வந்து என்ன ஏது என விசாரிக்கின்றனர். ‌‌ நீங்களே நியாயத்தை சொல்லுங்க கொழுந்தனாரே என கதிரிடம் நடந்ததை கூறுகிறார் மீனா. பின்னர் நீங்க போட்ட கோலம் நல்லா இருந்துச்சு என கூறி மீனாவுக்கு ஐஸ் வைத்து அவரை சமாதானம் செய்கிறார்.

பின்னர் தனம் கடையின் மேப்பை பார்த்து பெரிய கடையா தான் இருக்கு என கூற மீண்டும் முல்லைக்கும் மீனாவுக்கும் இடையே முட்டிக் கொள்கிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.