கண்ணனுக்காக வீட்டுக்குத் தெரியாமல் தனம் ஒரு வேலையை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

Pandian Stores Serial Episode Update 13.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் வீட்டில் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க 30 ரூபாய் குறைகிறது எப்படி குறைகிறது என ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கையில் வைத்திருக்கும் நோட்டு மற்றும் பேனா விலை தான் அந்த முப்பது ரூபாய் என ஐஸ்வர்யா கூறினார்.

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

கண்ணனுக்காக வீட்டுக்குத் தெரியாமல் தனம் செய்த வேலை.. கடைசில கையும் களவுமாக சிக்கிட்டாரே - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இதனையடுத்து கண்ணன் தன்னுடைய வீட்டில் இருந்து கார குழம்பு வைக்கும் வாசம் வருவதாக கூறினார். தனத்தின் சமையல் எப்படி இருக்கும்? அந்த வீட்டில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வேன் என்பது குறித்து கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கூறினார். பின்னர் ஐஸ்வர்யா நான் போய் குழம்பு வாங்கிட்டு வருகிறேன் என்று தோட்டத்து பக்கமாக சென்று அக்கா அக்கா என்று அழைத்தார். மூவரும் கிச்சனிலிருந்து வெளியே வந்தனர். ஐஸ்வர்யா குழம்பு வாசத்தை வைத்து கண்ணன் குழம்பு கேட்டான் என்று கூற தனம் நீ எவ்வளவு நேரம் நின்றாலும் அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது என கூறினார். சரி குழம்பு தரவில்லை என்றாலும் குழம்பு எப்படி வைக்கிறது சொல்லுங்க என கேட்க தனம் உள்ளே சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து மீனா மற்றும் முல்லை என இருவரும் உள்ளே சென்று விடுகின்றனர். ஐஸ்வரியா குழம்பு இல்லாமல் வீட்டுக்கு திரும்பி விடுகிறார்.

என்னோட அப்பா அந்த கல்யாணத்துக்கு Okey சொல்லல – Sanchita Shetty Emotional Speech..!

அதன் பின்னர் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு தினத்தில் குழம்பு ஊற்றி யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து வெளியே எடுத்துச் செல்கிறார் தனம். இதனை நோட்டம் பிடித்த மீனா தனத்துக்கு தெரியாமல் அவரை பின்தொடர்கிறார்.

ஐஸ்வர்யா ஐஸ்வர்யா என தனம் கூப்பிட ஐஸ்வர்யா உள்ளே இருந்து வெளியே வருகிறார். உடனே தனம் சரண்யா சரண்யா என்ன கத்திரிக்காய் குழம்பு வச்சு இங்கே வைக்கிறேன் எடுத்துக்கோ என திண்ணையின் மீது வைக்க வருகிறார். அப்போது மீனா உள்ளே இருந்து வந்து விடுகிறார். மீனா பார்த்து விட்டதை கண்டு ஷாக்காகிறார் தனம். நீ எப்போ வந்த மீனா என கேட்க நீங்க ஐஸ்வர்யா இல்ல இல்ல சரண்யா என கூப்பிடும் போதே வந்துவிட்டேன் என சொல்கிறார். இருங்க அக்கா சரண்யா வந்து குழம்பு எடுத்துட்டு போகட்டும் இல்ல குடுங்க நான் எடுத்துட்டு போய் தரேன் என மீனா கேட்க அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவங்க வந்து எடுத்துப்பாங்க வா உள்ளே போகலாம் என மீனாவை தரதரவென அழைத்து வந்து விடுகிறார்.

பின்னர் ஐஸ்வர்யா வந்து குழம்பு எடுத்துக் கொண்டு செல்ல கண்ணன் அதை மனதார சாப்பிடுகிறார். அதன்பிறகு இருவரும் காலேஜுக்கு கிளம்பி வெளியே வந்து நிற்கும்போது கயல் அழுவும் சத்தம் கேட்கிறது. மீனா வெளியே துணி துவைத்துக் கொண்டு இருப்பதால் அவருக்கு கயல் அழுவது கேட்கவில்லை. உடனே கண்ணன் உள்ளே ஓடிச்சென்று கயலை தூக்கி கொள்கிறார். தோட்டத்திலிருந்து உள்ளே வந்த தனம் கயல் அழுவதை கேட்டு மீனாவிடம் கூறுகிறார். இருவரும் உள்ளே வருகின்றனர்.

கண்ணன் கயிலை தூக்கி கொஞ்சி கொண்டு இருக்க அப்படியே வெளியே தூக்கி சென்று விடுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் கயலை கொஞ்சுகின்றனர். தனம் மற்றும் மீனா என இருவரும் வேடிக்கை பார்க்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.