இனி பாண்டியன் ஸ்டோர் சீரியல் பெற மாட்டீர்களா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மீனாவின் அம்மாவாக நடித்து வருபவர் பதிலளித்துள்ளார்.

Pandian Stores Serial Actress Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது தமிழகத்தில் கடைகள் 12 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை வைத்து பல மீம்கள் வெளியாகி வருகின்றன.

இனி பாண்டியன் ஸ்டோர் சீரியல் வர மாட்டீர்களா?? ரசிகரின் கேள்விக்கு நடிகை அளித்த பதில் ‌

இந்த நிலையில் பல நாட்களாக இந்த சீரியலில் தலை காட்டாமல் இருந்து வருகிறார் மீனாவின் அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீதிவ்யா. ரசிகர் ஒருவர் இவரிடம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வரமாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? கதையாசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். இதனால் மீனாவின் அம்மாவாக நடிப்பவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகமாகி உள்ளது.