
வறுமையால் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்று நடுரோட்டில் நின்றதாக நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாந்தி வில்லியம்ஸ். தனது 12 வயதில் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களிலும் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடிக்கிறார். பிரபல கேமரா மேன் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

நான்கு குழந்தைகளுடன் குடும்பமாக வசதியாக வாழ்ந்து வந்த சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய கணவருக்கு கார்கள் என்றால் பிடிக்கும் குழந்தை போல பார்த்துக் கொள்வார். நிறைய கார்கள் வாங்கி வைத்திருந்தார். அவர் எங்கு போகவேண்டும் என்று சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து வைத்துக்கொண்டு டிரைவர் தயாராக இருப்பார்.
அப்படி வாழ்ந்த நாங்கள் படம் தயாரித்து நஷ்டமானதால் வறுமை வாட்ட தொடங்கியது, இதனால் கேகே நகரில் இருந்த எனது சொந்த வீட்டை விற்று நடுரோட்டில் நின்றோம். அந்த வீட்டின் மதிப்பு இன்று 100 கோடி இருக்கும் என தெரிவித்துள்ளார். மீண்டும் பழைய நிலைக்கு வர அதிகம் கஷ்டப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
