ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக கண்ணனாக நடித்து வரும் சரவணன் விக்ரமும் அவருக்கு ஜோடியாக நடித்த தீபிகாவும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Pandian Stores Saravanan and Deepika Love : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக நடித்து வருபவர் கண்ணன். இவர் ஐஸ்வர்யாவை காதலித்து திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு தற்போது தனியாக இருந்து வருகிறார். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் பலர் மாறிய நிலையில் விஜே தீபிகா கச்சிதமாக பொருந்தி நடித்து வந்தார்.

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறும் கண்ணன், ஐஸ்வர்யா - வைரலாகும் புகைப்படம்

ஆனால் அவரது முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறையவில்லை என்ற காரணத்திற்காக அவரை சீரியலில் இருந்து நீக்கியது விஜய் டிவி. இதனால் தற்போது சாய் காயத்ரி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கண்ணனுக்கும் எவருக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லை என தற்போது வரை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

அதேசமயம் சரவண விக்ரமும் தீபிகாவும் தொடர்ந்து யூடியூப் சேனலில் ஒன்றாக இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இருவரும் நண்பர்கள் என கூறி வருகின்றனர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறது என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது.

Maanaadu படத்தை விமர்சனம் செய்த Sivakarthikeyan – இப்போ இதான் Trend | STR, Venkat Prabhu | HD

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறும் கண்ணன், ஐஸ்வர்யா - வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஈஷா மையத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அங்கே இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தீபிகா தான் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உண்மையைச் சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே சொல்லிட்டு இருப்பீங்க? எத்தனை விஜய் டிவியின் ரீல் ஜோடி ரியல் ஜோடியாவதை பார்த்து இருக்கோம் எனவும் கூறி வருகின்றனர்.