பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்துள்ளார் புது ஐஸ்வர்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஐஸ்வர்யாவாக முதலில் வைஷாலி நடித்த நிலையில் இரண்டு மூன்று எபிசோடில் அவர் மாற்றப்பட்டு விஜே தீபிகா நடிக்க தொடங்கினார்.

இவருக்கும் கண்ணனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பர்பெக்ட்டாக ஒர்க் அவுட் ஆகி வந்த நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு சாய் காயத்ரி நடித்து வந்த நிலையில் தற்போது அவர் இனி இந்த கேரக்டர் சரியில்லை என சொல்லி விலகிக் கொண்டார்.

இவரது வெளியேற்றத்துக்கு பிறகு தற்போது மீண்டும் தீபிகா ஐஸ்வர்யாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணன் மற்றும் கதிருடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.