மீனா தனத்தை தொடர்ந்து முல்லை கர்ப்பமாக இருக்கிறார் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Mullai in Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மீனா, தனத்தை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை?? தீயாக பரவும் புகைப்படம்

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது காவியா அறிவுமணி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த ரோலுக்கு இவர் செட்டாகவில்லை என விமர்சனங்கள் எழுந்தாலும் தற்போது பர்பெக்ட்டாக மேட்ச் ஆகிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா முதலில் குழந்தை பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அடுத்ததாக தனம் சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் காவியா கர்ப்பமாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

மீனா, தனத்தை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை?? தீயாக பரவும் புகைப்படம்
பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

ஆனால் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கான புகைப்படம் அல்ல. காவியா அறிவுமணி டாம் செர்ரி என்ற புதிய வெப்சைட் தொடர் ஒன்றில் நடிக்கிறார். அந்த சீரியலில் தான் இவர் கர்ப்பமாக இருப்பது போல நடிக்கிறார். அது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் எடுக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? – கதறி அழுத சிம்பு நண்பர் Cool Suresh | MaanaaduReleaseIssue