ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஹேமா. இந்த சீரியலில் இவருக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம்.
அந்த வகையில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஹேமா தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
“மினுக்கி மினுக்கி மேனா மினிக்கி” என்ற தங்கலான் பட பாடலுக்கு கியூட்டாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.