Pandian Stores Meena About Delivery
Pandian Stores Meena About Delivery

பாண்டியம்மா என்று கொடுத்தாச்சு என பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குட் நியூஸ் என கூறியுள்ளார்.

Pandian Stores Meena About Delivery : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

தற்போது இந்த சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். சீரியல் காட்சிகளுக்கு ஏற்றவாறு நிஜத்திலும் இவர் கர்ப்பம் தரித்துள்ளார்.

கடந்த வாரம் சீரியலில் ஹேமாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்தது. அதற்கு முன்னதாக அவரது வீட்டிலும் வளைகாப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது ஹேமா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருக்கு பாண்டியம்மா பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதாவது சீரியலில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நிஜத்தில் மீனாவிற்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.