Pandian Stores Kumaran about Fb Pages

யாரும் அதையெல்லாம் நம்பாதீங்க என பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Pandian Stores Kumaran about Fb Pages : தமிழ் சினிமாவின் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். டான்ஸரான இவர் குறும்படம் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் இவர் முகநூல் பக்கத்தில் தன்னுடைய பெயரில் நிறைய போலி கணக்குகள் உள்ளதாகவும் தனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே கணக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முகநூல் பக்கத்தில் தன்னுடைய பெயரில் இயங்கும் பக்கங்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.