ஒருவழியாக லஷ்மி அம்மாவை சந்தித்துள்ளார் கண்ணன்.

Pandian Stores Kannan With Lakshmi Amma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. இவர் இறந்து போனது போன்ற காட்சிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒளிபரப்பானது. கடைசிவரை கண்ணனால் தன்னுடைய அம்மாவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரூ.1.80 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற பெற்றோர் : வறுமை காரணமாகுமா?

ஒருவழியாக லஷ்மி அம்மாவை சந்தித்த கண்ணன்.. இணையத்தில் லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படங்கள்.!!

இதனால் கண்ணன் தனது அம்மாவை நினைத்து கதறி அழும் காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க வைத்தது. மிகவும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கண்ணன் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷீலாவிடம் பேசாமலேயே இருந்து உள்ளார். வேலு கடைசிநாள் காட்சியில்கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என கண்ணன் தெரிவித்திருந்தார்.

பொண்ணுங்க எங்க இருக்காங்களோ அங்க Rakshan இருப்பாரு! – கலாய்த்த நடிகை Pavithra Lakshmi

இந்த நிலையில் கண்ணன் பேட்டி ஒன்றை அளித்தபோது அந்தப் பேட்டியின் இடையில் சர்ப்ரைஸாக லக்ஷ்மி அம்மா என்ட்ரி கொடுத்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அப்போதுதான் சந்தித்துக் கொண்டுள்ளனர். இருவரும் பாசத்தை பொழிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.