Pandian Stores Kannan Sister Photo

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரமின் தங்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Kannan Sister Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் கதிர், முல்லை, ஜூவா என அனைவருக்குமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது எனக் கூறலாம். இதே சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். குறும்பு தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து டப்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் முறையாக இந்த புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் கண்ணனுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Attachments area