Pandian Stores Kannan and Aishwarya Photo Trolls

வீட்டை விட்டு துரத்திய வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் ஊஞ்சல் கட்டி ஆடியுள்ளனர் கண்ணன், ஐஸ்வர்யா.

Pandian Stores Kannan and Aishwarya Photo Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம்.

இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் விஜே தீபிகா. இவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவருக்கும் திருமணம் நடந்தது போன்ற காட்சி ஒளிபரப்பானது. வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டதால் இரண்டு பேர் வீட்டிலும் இவர்களை வெளியேற்றி விட்டனர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த கண்ணன் ஐஸ்வர்யா நண்பரின் வீட்டில் தங்கி இருக்கின்றனர்.

நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு, 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்

இந்த நிலையில் விஜே தீபிகா திருமணம் ஆன கையோடு கண்ணனுடன் ஊஞ்சல் கட்டி ஆடிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வீட்டை விட்டு துரத்துன வருத்தம் கொஞ்சம்கூட இல்லை என அவர்களை கலாய்த்து வருகின்றனர்.

Dhruv Vikram about Director Bala | Ciyaan Vikram