பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தினசரி சம்பளமாக என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஹேமா.

Pandian Stores Hema Reply to Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தினசரி சம்பளமா?? கூகுளில் வெளியான தகவல்கள் - மீனா கொடுத்த விளக்கம்.!!

இது தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அதாவது ஜூலை 12ம் தேதி தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

வில்வித்தை ரேக்கிங் போட்டி : இன்று வெச்ச குறி தப்பியது..

மேலும் ஜூலை மாதத்தில் வெளியான வீடியோக்களுக்கு ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்டுகளை எடுத்து அதற்கு பதில் அளித்திருந்தார். உங்களுக்கு ஆகஸ்ட் 19 தானே பிறந்தநாள் கூகுளில் அப்படித்தான் இருக்கிறது என ரசிகர் ஒருவர் கேட்க இல்லை ஜூலை 12 தான் என்னுடைய பிறந்தநாள். என்னுடைய பெயரில் இன்னொரு நடிகை இருப்பதால் அவருடைய தகவல்களையும் மாற்றி மாற்றி கூகுள் காட்டுகிறது என கூறியுள்ளார்.

சென்னை சூளைமேட்டை கலக்கும் Quality பரோட்டா கடை! | Food Review With VJ Viram | EP – 1

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிப்பதற்கு உங்களுக்கு தினக்கூலியா அல்லது மாத சம்பளமா என இன்னொருவர் கேட்க மாத சம்பளம் தான் எத்தனை நாள் நடிக்கிறோமோ அத்தனை நாளைக்கு சம்பளம் என கூறியுள்ளார்.

உங்கள் ஆண் குழந்தையை நடிக்க வைப்பீர்களா என கேட்டதற்கு இப்போது அவனுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் இப்போது நடிக்க வைப்பதில் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. அவன் வளர்ந்து நடிக்க ஆசைப் பட்டால் நடக்கட்டும் என கூறியுள்ளார்.