ஜொலிக்கும் வைர நகைகளை அணிந்து கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.

Pandian Stores Hema in Diamond Shopping : தமிழகத்தில் சென்னையில் தி.நகர் மற்றும் தாம்பரம் இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என அனைத்து வகையான நகைகளுக்கும் மிகப்பெரிய ஷோரூமை கொண்டுள்ள ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

மூன்றாயிரம் முதலே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் சாமானிய மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஏற்ற இடமாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது.

வனிதா விஜயகுமார், தீபா, ஷாமிலி சுகுமார், மணிமேகலை, வினோத், சரத் மற்றும் பல யூட்யூப் பிரபலங்கள் என பலர் இந்த ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த கடையில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா தற்போது மீண்டும் வைர நகைகளை ஷாப்பிங் செய்ய வருகை தந்துள்ளார். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வைர நகைகளை அவர் பார்த்து ரசித்துள்ளார். சிறிய குழந்தைகளுக்கான மோதிரம், பெரியவர்களுக்கான நெக்லஸ், ஆரம், வளையல், மோதிரம் என அனைத்தையும் அணிந்து பார்த்து அது குறித்து பேசியுள்ளார்.

விதவிதமான டிசைன்களிலான வைர நகைகள் அவரை மேலும் அழகுப்படுத்தியுள்ளது. கல்யாணப் பெண்களுக்கான பிரத்தியேக நகைகளை வைர நகைகளை உடல் முழுவதும் அணிந்து கல்யாண பெண்ணாக போல் மாறி உள்ளார். அதைப்போல காதுக்கு தோடு, வைரத்தில் பெல்ட், கண் கண்ணாடி, மூக்குத்தி, தாலி செயின், முகப்பு வைத்த தாலி செயின், அழகிய உருவங்கள் பொறிக்கப்பட்ட செயின்கள் ஆகியவற்றை அணிந்து பார்த்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் இந்த வைர நகைகளை திருப்பிக் கொடுத்து புதிய நகைகளை வாங்கும் போது எந்த விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என கேட்க அன்றைய மார்க்கெட் விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் என கூறுகின்றனர். அதை கேட்ட ஹேமா தங்க நகைகளை காட்டிலும் வைர நகைகள் வாங்குவது என்பது ஒரு முதலீடு போல தான் என தெரிவித்துள்ளார். உதாரணமாக 50,000 ரூபாய்க்கு வைர நகை வாங்கி ஓரிரு வருடங்கள் கழித்து அதை மாற்ற முயற்சிக்கும் போது நகையின் மதிப்பு 55 ஆயிரம் எனில் அந்த விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் எனக் கூறுகின்றனர்.

இந்த அழகிய வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.