Pandian Stores Hema Blessed With Baby Boy
Pandian Stores Hema Blessed With Baby Boy

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவிற்கு நிஜத்திலும் குழந்தை பிறந்து விட்டது என மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Pandian Stores Hema Blessed With Baby Boy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ்.

சீரியலில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த இவருக்கு பெண் குழந்தை பிறந்தது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. நிஜத்திலும் மீனா கர்ப்பமாக இருந்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடைபெற்ற நிலையில் நிஜத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்திருந்தது.

வலிமை அப்டேட், கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. வைரலாகும் வாட்ஸப் சாட் வீடியோ – அஜித் ரசிகர்கள் செய்த குசும்ப பாருங்க!

இந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பாண்டியன் ஸ்டோர் முல்லை வேடத்தில் நடித்து வரும் விஜே சித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

இதனால் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹேமா சதீஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீரியலில் பெண் குழந்தைக்கு அம்மாவாகவும் நிஜத்தில் ஆண் குழந்தைக்கு அம்மாவாகியும் உள்ளார் ஹேமா சதீஷ்.