Pandian Stores Hema Achievement

இரண்டே மாதத்தில் மக்கள் மத்தியில் கிடைத்த அங்கீகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஹேமா சதிஷ்.

Pandian Stores Hema Achievement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அதே போல் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களுக்கென தனித்தனியாக யூ டியூப் சேனல் வைத்துள்ளனர். அந்த சேனலில் வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா சதிஷ் கடந்த டிசம்பர் மாதம் ஹேமாஸ் டைரி என்ற புதிய சேனலை தொடங்கி இருந்தார்.

இந்த சேனல் தற்போது 1 லட்சம் Subscriber-களை பெற்றுள்ளது. இது குறித்து மகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹேமா.

YouTube video

Preview YouTube video 🔴LIVE | Unboxing Silver Play button and Q & A session with my darlingzzzz | Hema’s Diary