பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தியின் கல்யாண வைபவம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Pandian Stores Fans Request to Vijay Tv : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் இந்த சீரியல் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக சீரியலில் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பபடாமல் உள்ளது. இதன் காரணமாக மூர்த்தியின் கல்யாண வைபவம் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரி டெலிகாஸ்ட் - விஜய் டிவிக்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.!!

ஆனால் ரசிகர்கள் மூர்த்தியின் கல்யாண வைபவம் மறுஒளிபரப்பு செய்வதைவிட விஜே சித்ரா முறையாக நடித்த காட்சிகளை மீண்டும் ஒளிபரப்புங்கள். மிடில் சித்ராவை பார்க்கும் ஒரு வாய்ப்பாவது எங்களுக்கு கிடைக்கும் என விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கையை தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மகா சங்கம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த மகா சங்கமம் பதிலாக வெறும் பாரதிகண்ணம்மாவை மட்டும் முதலிலிருந்து ஒளிபரப்புங்கள் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரி டெலிகாஸ்ட் - விஜய் டிவிக்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.!!