கண்ணனால் கதிர் முல்லை இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

Pandian Stores Episode Update 30.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஜீவா கடையில் கண்ணன் ஐஸ்வர்யாவை ஏன் நம்ம வீட்டுக்கு கூப்பிட கூடாது என கேட்க உடனே மூர்த்தி அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம். கண்ணன் நம்ம வீட்டில கஷ்டமே தெரியாம இருந்தவன். ரெண்டு பேரையும் அந்த வீட்டுக்கு வர வைத்து படிக்க வைக்கிறது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அது ஐஸ்வர்யாவுக்கு மரியாதையா இருக்காது. அவன் கஷ்டம்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் வாழ்க்கையை பத்தி தெரிஞ்சுக்கணும். நாம ஒதுங்கி இருந்தாலும் அவனுக்கு ஒரு கஷ்டம்னா உதவ தானே போகிறோம் என கூறுகிறார்.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

கண்ணனால் கதிர் முல்லை இடையே விடுத்த பிரச்சனை.. வீட்டுக்கு கிளம்பும் முல்லை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணன் ஏன் உங்க மாமனார் கடைக்கு வேலைக்குப் போவதில்லை என மூர்த்தி கேட்க தெரியல. அவர் எதுவும் சொல்லல நான் வேணா போன் போட்டு கேட்க வா என போனை எடுக்கிறார். இல்ல வேண்டாம் டா ஏதாவது பிரச்சனைனா அவரே சொல்லி இருப்பாரு என கூறிவிடுகிறார் மூர்த்தி .

இந்த பக்கம் வீட்டில் தனம் மற்றும் முல்லை அமர்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் கதிர் வருகிறார். ரெண்டு பேரும் மெதுவா சிரிக்கலாம்ல குழந்தை எந்திரிச்சிட்டான் பாருங்க என கூறுகிறார். என்னடா நீ எங்களை சத்தமா மூச்சு கூட விட கூடாது என்று சொல்லுவது போல. குழந்தை எந்திரிப்பாண்ணா அதுவும் சொல்லுவேன் என கதிர் கூறுகிறார். இந்த நேரத்தில் மூர்த்தி வீட்டுக்கு வருகிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

கண்ணனால் கதிர் முல்லை இடையே விடுத்த பிரச்சனை.. வீட்டுக்கு கிளம்பும் முல்லை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

கதிரிடம் ஏன்டா கதிர் காண்ட்ராக்ட்டருக்கு 20 ஆயிரம் பணம் கொடுத்துட்டியா என கேட்கிறார். கொடுத்துட்டேன் என கூறுகிறார். அவர் இன்னும் பணம் தர்றேன்னு வேலையை நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படி பண்ணா எப்போ கடையை கட்டி முடிகிறது என கேட்கிறார். நாளைக்கு என்னோட வா அவர் கிட்ட பேசலாம் என கூறுகிறார். பணம் கொடுக்கும்போது ஏதாவது ரசீது வாங்க மாட்டீர்கள் என கேட்கிறார். அதன்பிறகு மூர்த்தி எழுந்து உள்ளே செல்லும்போது கதிர் பணத்தைத் தொலைத்து விட்டதாக கூறுகிறார். அது ஏன் அன்னைக்கே சொல்லவில்லை என மூர்த்தி கேட்க தேடிப்பார்த்து கண்டுபிடித்துவிடலாம் என நினைத்தேன் கிடைக்கவில்லை என சொல்கிறார். கதை சொல்வது உண்மையில்லை என மூர்த்தி மற்றும் தனம் என இருவருக்கும் தெரிகிறது. தனம் வேற யாருக்காச்சும் உதவி பண்ணிட்டியா என கேட்கிறார். இல்ல நான் சொன்னதுதான் உண்மை திரும்பவும் சொல்றேன் அது தான் உண்மை என கூறிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு தனம் நான் அவன் கிட்ட பேசுறேன் மாமா நீங்க வாங்க சாப்பிடலாம் என கூப்பிட நம்ம வீட்ல இப்ப எதுவுமே சரியா இல்ல. அவன் பொய் சொல்லிட்டு போறான் சாப்பாடு 1 கேட்குதா என கஷ்டப்பட்டு விட்டு மூர்த்தி உள்ளே சென்று விடுகிறார். பிறகு தனம் உன்கிட்ட ஏதாவது சொன்னானா என கேட்க எனக்கு எதுவும் தெரியாது அக்கா என முல்லை கூறிவிடுகிறார்.

ரூமுக்குள் போன முல்லை வீட்டில் கேட்கும் போது உண்மையை சொல்ல வேண்டியதுதானே. ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய் சொல்வீங்க.? யாருக்கு உதவி பண்ணிட்டு எதுக்கு நீங்க பழியைச் சுமக்கறீங்க. அண்ணன் தானே தீர்க்குமாறு விடு என கதை சொல்லி நீங்க தப்பு பண்ணி அவர் திட்டுனா சரி. இதை எல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது நான் எங்க வீட்டுக்கு கிளம்பி விடுவேன் என கூறுகிறார். உன்னால நான் இல்லாம இருக்க முடியாது என கதிர் சொல்ல இல்லை அதெல்லாம் இருக்க முடியும் இதை தான் பார்க்க முடியாது என கூறுகிறார்.

கதிர் முல்லையை தொட என்னை தொடாதீங்க என அவர் கோபித்துக் கொண்டு கீழே படுத்துக் கொள்கிறார். நீங்க அண்ணன் கிட்ட உண்மைய சொல்லலனா நான் வீட்டுக்கு கிளம்பி விடுவேன் என கூறுகிறார். கதிர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.