முல்லையால் வீட்டில் நடந்த பிரச்சனை காரணமாக ஜீவா மன்னிப்பு கேட்டுள்ளார்.

Pandian Stores Episode Update 30.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முல்லை ஜீவாவிடம் கோபப்பட்டு விட்டு உள்ளே சென்ற பிறகு தனம் கதிரிடம் நீ கட்டிடம் கட்டும் இடத்தில் வேலை மட்டும் வாங்கு எந்த வேலையும் செய்யாதே என கூறினார். பிறகு மீனா உள்ளே சென்று முல்லையால் நடந்து முடிந்த சண்டை பற்றி பேசினார். பிறகு ஜீவா மீண்டும் வீட்டுக்கு வந்து முல்லையிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார். முல்லையும் ஜீவாவிடம் நான் படபடவென பேசியது தப்புதான் என மன்னிப்பு கேட்டார்.

முல்லையால் வீட்டில் நடந்த களேபரம்.. மன்னிப்பு கேட்ட ஜீவா.. அதிருப்தியில் மீனா - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்
ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

ஜீவா முல்லையிடம் மன்னிப்பு கேட்டது கதிருக்கும் மீனாவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜீவா அங்கிருந்து கடைக்கு கிளம்ப பின்னாடியே வந்த மீனா ஜீவாவை மடக்கி முல்லையிடம் நீ எதுக்கு மன்னிப்பு கேட்கணும்.? நீ ஒன்னும் தப்பா சொல்லலையே. கதிர் அங்க வேலை செய்கிறாரா இல்லையானு நீ பார்த்தியா? எனக்கு நீ மன்னிப்பு கேட்டது பிடிக்கல என கூறினார். ஒரே வீட்டில் இருக்கோம் ஒவ்வொருத்தரோட முகத்தை பார்த்துக்கொண்டு மனசு கஷ்டமா இருக்க கூடாது என்று தான் மன்னிப்பு கேட்டேன்.

இதை ஏன் இப்ப நீ பெரிய பிரச்சனையா ஆக்குற என ஜீவா கூற இந்த வீட்டுல நான் தான் எல்லாத்தையும் பிரச்சனையாக்குறேன். இதுவே நான் பேசியிருந்தா என்ன இங்க நடுவீட்டில் நிக்க வச்சு தூக்கில் போட்டு இருப்பிங்க என படபடவென பேசுகிறார். அதன்பிறகு மீனாவை சமாதானப்படுத்தி விட்டு கடைக்கு கிளம்பினார் ஜீவா.

காஞ்சனா மாதிரி இருக்கு – IPC 376 Public Review | Nandita Swetha | Yaadhav Ramalinkgam | HD

கட்டிடம் கட்டும் இடத்தில் கதிர் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்த மூர்த்தி அவரை அழைத்து நீ ஏன்டா இந்த வேலை செய்யுற என திட்டினார். காண்ட்ராக்ட் எடுத்தவரை அழைத்து இனி கதிரை வேலை வாங்காதீங்க என கூறினார். ‌ பிறகு அந்த ஏடிஎம் இடம் கேட்டவங்கள வர சொல்லு இடம் கொடுத்து விடலாம் என சொல்ல நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் நீங்க வேற யாருக்கு தரேன்னு சொன்னிங்களே அவங்களுக்கு கொடுங்க. நீங்க சொன்னது சொன்னபடி இருக்கணும் என சொல்கிறார். என் மேல கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா என மூர்த்தி கேட்க எதுக்குணே வருத்தப்படணும் என கதிர் கேட்கிறார்.

இந்தப் பக்கம் தனம் துணி மடித்துக்கொண்டு இருக்க அந்த நேரத்தில் வந்த மீனா ஜீவா முல்லையிடம் மன்னிப்பு கேட்டதாக கூற தனம் நான் சொன்னதும் வந்து மன்னிப்பு கேட்டுட்டானா? பிரச்சனையை எவ்வளவு ஈசியா முடிச்சுட்டான் பாரு என கூறுகிறார். இதுவே நான் பேசி இருந்தா எல்லாரும் என்னை திட்டி இருப்பீர்கள் என மீனா கூறுகிறார்.

இந்த நேரத்தில் முல்லை வந்து இவர்கள் பக்கத்தில் உட்காருகிறார். அக்கா நான் பேசுனதுல ஒன்னும் வருத்தம் இல்லையே என முல்லை கேட்க உடனே மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல ஏன்னா பேசினது நீங்களாச்சே என கூறுகிறார். நீ என்ன எல்லாருக்கும் வாயா அவ என் கிட்ட தானே கேட்டா என தனம் கூறிவிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு என முல்லையிடம் கூறுகிறார். அது தானே நானும் சொன்னேன் என மீனா கூற முல்லை உங்ககிட்டயா நான் சண்டை போட்டேன் என கேட்கிறார். ஜீவா எனக்கு வேற யாரோ இல்லையே என மீனா சொல்ல என்ன மன்னிச்சிடுங்க என முல்லை கூறுகிறார். பிறகு கயலை சித்தி கிட்ட வாங்க என அழைக்க மீனா கயலை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறார். இதனால் முல்லை மற்றும் தனம் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.