கதிர் பற்றி ஜீவா சொன்ன வார்த்தையால் முல்லைக்கு கோபம் பத்திகிட்டு வந்துள்ளது.

Pandian Stores Episode Update 29.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தூக்கத்திலிருந்து எழுந்த தனம் கயலை காணவில்லை என பதறியடித்து கயல் கயல் என்று கத்துகிறார். உடனே முல்லை உள்ளே வந்து அவ எழுந்துட்டாக்கா மீனா தூக்கிட்டுப் போயிட்டாங்க என கூறுகிறார். மீனா கிட்ட தானே இருக்கா என மீண்டும் தனம் கேட்க ஆமாம் என கூறுகிறார். பிறகு தனம் சரி என தன்னுடைய பையனை தூக்கி கொஞ்சுகிறார்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

பிறகு முல்லை கிச்சனில் இருக்க அந்த நேரம் மீனா வந்து என்ன செய்றீங்க என கேட்கிறார். தயிருக்கு பாலை முன்னாடியே காய்ச்சி ஆறவைத்து இருக்கணும். மறந்துட்டேன் என கூறுகிறார் முல்லை. பிறகு முல்லை மதியம் அதுக்குள்ள அப்படிப் பேசிட்டீங்க நீங்க.. அக்காவை பற்றி உங்களுக்கு தெரியாதா என கூறுகிறார். அவங்க கயலை தூங்க வைத்துவிட்டு தான் தூங்கி இருக்காங்க. உடனே எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி அவங்க கிட்ட சகஜமா பேசுறீங்க. என்னால அப்படி இருக்க முடியாது என கூறுகிறார். இப்ப என்ன அவங்க குடுமியை பிடித்து சண்டை போட சொல்றீங்களா என மீனா கேட்கிறார். நான் அப்படி எல்லாம் சொல்லல எனக் கூறுகிறார் முல்லை. உடனே அங்கு தனம் வந்து என்ன செஞ்சிட்டு இருக்கீங்க என கேட்கிறார்.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction 

பிறகு முல்லையிடம் சாப்பாடு இருக்கு தானே என கேட்கிறார். அதெல்லாம் நிறையவே இருக்குக்கா என கூற அத கண்ணன் வீட்டில கொடுத்திடு என கூறுகிறார். நீங்க அதிகமா சமைக்க சொல்லும் போதே தெரியும் என முல்லை கூறுகிறார். நான் கண்ணன் வீட்ல கொடுக்கிறேன் என மீனா கூறுகிறார். சரி நீ கண்ணன் வீட்டில் குடு, பாக்ஸ்ல முல்லை போடட்டும் என்று கூறுகிறார். அது ஏன் அவங்க தான் போடணும் நானே போடுகிறேன் என மீனா கூறுகிறார். சரி பாக்ஸ் எங்க இருக்கு எடு என தனம் சொல்ல இதுவே எடுக்கிறேன் என மீனா இருக்கும் பாத்திரங்களை உருட்டுகிறார். பிறகு முல்லையிடம் எங்க இருக்கு என கேட்கிறார். அதுக்குத்தான் முல்லையை போட சொன்னேன் என சொல்லிவிட்டு தனம் அங்கிருந்து கிளம்புகிறார்.

இரவு கதிர் கடினமாக வேலை செய்ததால் உடம்பு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த முல்லை அவருக்கு கசாயம் வைத்து கொடுத்து மாத்திரை கொடுத்து சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தார். அப்படியே இருவருக்கும் சில நிமிடங்கள் ரொமான்ஸ் நடக்கிறது. மறுநாள் காலையில் வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீனா தூங்கி தூங்கி விழுகிறார். இதனைப் பார்த்துவிட்டு மூர்த்தி எதுக்கு மீனா இப்படி தூங்கி வழிந்து கொண்டிருக்க எனக் கேட்க நைட் எல்லாம் சரியா தூங்கலை என கூறுகிறார். உடனே முல்லை போன வாரம் எனக்கு கூட ஒரு மூணு நாள் அப்படித்தான் இருந்தது என சொல்ல மீனா அவங்க என்ன தானே கேட்டாங்க நீங்க எதற்கு பதில் சொல்றீங்க என கோபப்படுகிறார்.

உடனே ஜீவா தூக்கம் வந்தா நீ போய் தூங்கு மீனா அரை தூக்கத்துல சண்டை போட்டுட்டு இருக்காது என சொல்கிறார். அதன்பிறகு மூர்த்தி கதிரிடம் ஒருவருக்கு பணம் குடுக்க சொன்னேனே கொடுத்துட்டியா என கேட்கிறார். மறந்துட்டேன்னு சொல்கிறார் கதிர். என்னடா இப்படி பண்ணிட்ட அவர் அவசரம்னு கேட்டாரு இப்படி மறந்துட்டேன்னு சொல்ற. பிறகு ஜீவா கடையில் நாங்க டெலிவரி இது அதுனு பிஸியா இருக்கோம் நாங்க மறந்துட்டேன்னு சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கு. நீ கட்டடம் கட்ற இடத்துல சும்மா இருந்து பார்த்துட்டு தான் இருக்க, நீ எப்படிடா மறந்துட்டேன்னு சொல்லலாம் என கேட்கிறார்.

ஜீவா இப்படி ஒரு வார்த்தையை சொன்னதும் முல்லைக்கு கோபம் பத்திக்கொண்டு வந்தது. அவரு சும்மா இருக்காருன்னு எப்படி மாமா சொல்லலாம்? தினமும் ஒரு ஆள் செய்யுற வேலையை அவரே இழுத்து போட்டுட்டு செய்யறாரு. ஒரு ஆள் கூலியை மிச்சப்படுத்தலாம் என்று அவரே வேலை செய்யறாரு என சொல்கிறார். உடனே மூர்த்தி உன்னை யாருடா வேலை செய்யச் சொன்னது உன்னை அங்க நின்னு வேலை வாங்கத் தானே சொன்னோம். நீ அங்க வேலை செஞ்சு உன்னையும் கஷ்டப்படுத்தி வீட்ல இருக்கவங்களையும் ஏன்டா கஷ்டப்படுத்துற என கேட்கிறார். உடனே முல்லை அன்னைக்கு அக்காவும் மீனாவும் நகைய தூக்கி கொடுத்தாங்க. எங்க கிட்ட கொடுக்க ஒண்ணுமே இல்ல. உழைப்பையாவது போடணும்ல என பேசுகிறார்.

உடனே தனம் இதெல்லாம் யார் கேட்ட? நீ எப்ப முல்லை இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச என கேட்கிறார். எங்களுக்கா தோணும்ல அக்கா என கூறுகிறார். ஜீவாவும் மூர்த்தியும் கடைக்கு கிளம்பி விட கதிரும் வெளியே கிளம்பும் போது தனம் அவரை தடுத்து நிறுத்தி நீ ஏன்டா வேலை செய்கிற. இந்த வீட்டுல யார் அதிகமா உழைக்கிறா யார் கம்மியா வேலை பார்க்கிறானு யாரும் பார்க்கல. உனக்குள்ள அப்படி ஒரு எண்ணம் வந்திடுச்சா என கேட்கிறார். நான் எப்படி அண்ணி அதெல்லாம் நினைப்ப.. சும்மா நின்னுட்டு இருக்க முடியல அதான் வேலை செய்யலாம்னு செய்தேன் அவ்வளவு தான் என கதிர் கூறுகிறார். உடனே தனம் இனிமே வேலையெல்லாம் செய்யாத கெத்தா ஓனரா நின்னு வேலை வாங்கு என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.