கண்ணன் செய்த வேலையை அடுத்து கடைக்கு போன மூர்த்திக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Pandian Stores Episode Update 27.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா கண்ணன் என்ன செய்திருப்பான் ஏன் அப்பா கடைக்கு போகவில்லை என தெரிந்து கொள்ள அவருடைய அப்பாவுக்கு போன் செய்கிறார். முல்லை எவ்வளவு சமாளித்தும் அவர் அதனை கேட்கவில்லை. அவருடைய அப்பாவுக்கு போன் செய்ய அவருடைய நம்பர் பிஸியாக இருக்கிறது. கயல் அழுவதாக கூறி மீனாவின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் முல்லை. ஆனால் அவ அழுவல பெத்த அம்மாவுக்கு தெரியாதா என மீனா கூறுகிறார். இந்த நேரத்தில் சரியாக கயல் அழுவ தொடங்குகிறார். மேலும் முல்லையும் ஐஸ்வர்யா ஏதாச்சு பேசியிருப்பா எனதல்ல இருக்கும் இருக்கும் என மீனாவும் அமைதியாகி விடுகிறார்.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

கண்ணன் செய்த வேலையை அடுத்து கடைக்கு போன மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஐஸ்வர்யா தொடங்கிய புது பிசினஸ் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கண்ணன் அண்ணன் திட்டியதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்ணன் மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று தான் இதையெல்லாம் செய்தேன். நம்ம கண்ணு முன்னாடி நம்ம கஷ்டமர் இன்னொரு கடைக்குப் போகிறதை பார்த்துட்டு இருக்க முடியாது. ஆனா நான் செய்ததெல்லாம் தப்பாக போய் முடிந்து விட்டது. அண்ணா என்ன மொத்தமா வெறுத்துருமோனு பயமாயிருக்கு என கலங்குகிறார். ஐஸ்வர்யா கடைக்கு போனா அவங்களே எல்லாம் தெரிஞ்சுபாங்க விடு என சமாதானம் செய்கிறார்.

இந்தப் பக்கம் ஜீவா கண்ணனாடா இப்படியெல்லாம் செய்தான் என குடோனில் நின்று கதிரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சரி அண்ணன் கடைக்கு போகுறதுக்கு முன்னாடி நம்ப கடைக்கு போயி என்ன நடந்திருக்கும்னு பார்க்கலாம். ஏதாச்சு ஈடுகட்ட முடியும்னா அதை செய்யலாம் என ஜீவா கூற அதெல்லாம் முடியவே முடியாது அவன் ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து இருக்கான் என கதிர் கூறுகிறார்.

Thanjavur-ல் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டாங்க – நடிகர் Durai Sudhakarயை புகழ்ந்த தயாரிப்பாளர்!

இந்த நேரத்தில் மூர்த்தி இந்த இடத்திற்கு வந்து கண்ணன் செய்தது எல்லாம் சொன்னான்னு மூர்த்தி கேட்க இப்போ அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என ஜீவா கூறுகிறார். கணக்குல ஏதாச்சும் நஷ்டம் வந்தாலும் அதை நாம சமாளிச்சுக்கலாம் என ஜீவா கூறுகிறார். உடனே மூர்த்தி அதெல்லாம் ஒரு நஷ்டமும் இல்லை நமக்கு லாபம் தான் என கூறுகிறார். வந்தது போனது என எல்லாத்தையும் சரியாக கணக்கு எழுதி வச்சிருக்கான். 5 ஆயிரத்துக்கு மேல வாங்கினவங்களுக்கு சொன்னபடி பரிசுப் பொருட்களையும் கொடுத்து இருக்கான். எப்படிடா ஒரு நாள் கூட கடையில வந்து வேலை பண்ணாம இவ்வளவு சரியா வியாபாரம் பண்ணி இருக்கான் என ஆச்சரியத்துடன் கூறுகிறார் மூர்த்தி. அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி எங்க உருப்படாம போயிடுவாளோன்னு கவலைப்பட்ட ஆனால் இப்ப கொஞ்சம் தைரியம் வந்து இருக்கு என கூறுகிறார்.

கண்ணன் செய்த வேலையை அடுத்து கடைக்கு போன மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஐஸ்வர்யா தொடங்கிய புது பிசினஸ் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இருந்தாலும் நான் கண்ணனை அதிகமாக திட்டிட்டேன் நீங்க ரெண்டு பேரும் அவனைப் பார்த்தா கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கள் என கூறுகிறார். பிறகு மூர்த்தி அங்கிருந்து கிளம்புகிறார்.

Thanjavur-ல் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டாங்க – நடிகர் Durai Sudhakarயை புகழ்ந்த தயாரிப்பாளர்!

இந்தப் பக்கம் ஐஸ்வர்யா இட்லி சட்னி என அனைத்தையும் திண்ணையில் எடுத்து வந்து வைத்து புதிய கடையை திறக்கிறார். தூங்கி எழுந்து வெளியே வந்த கண்ணன் இதையெல்லாம் பார்த்துவிட்டு என்ன இதெல்லாம் என கேட்கிறார். எனக்குத்தான் நல்லா சமைக்கத் தெரியும்ல அக்கம் பக்கத்திலும் எதுவும் இட்லி கடை இல்லை ஒரு கிலோமீட்டர் போகணும். அதனால்தான் இப்படி ஒரு ஐடியா தொடங்கி விட்டேன் என கூறுகிறார். நமக்கும் வாடகை கொடுக்க இருக்கே இது அதுன்னு அடுத்தடுத்த செலவுகள் இருக்கு என ஐஸ்வர்யா சொல்கிறார்.

இந்த நேரத்தில் முல்லை வெளியே வந்து பார்க்கிறார். ஐஸ்வர்யா புதுசா கடை திறந்திருக்கோம் ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ல என கேட்க உள்ளே வேகமாக உள்ளே சென்று தனத்தை வெளியே அழைத்து வருகிறார். உங்களுக்கு இட்லி வேணும்னா இங்கேயே வாங்கிக்கங்க. நீங்க என்ன தண்ணியா ஒரு சட்னி இல்ல சாம்பார் தான் வைப்பீங்க. நாங்க சூப்பரா 3 சட்னி சாம்பார் வச்சிருக்கோம். நீங்க எங்க கிட்ட வாங்கி கேட்டீங்கன்னா எங்களுக்கும் வித்தா மாதிரி இருக்கும் உங்களுக்கும் இட்லி கிடைச்ச மாதிரி இருக்கும் ஐஸ்வர்யா சொல்ல முல்லை அவ பேச்சை பார்த்தீர்களா என தனத்தை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.

பிறகு கஸ்தூரி வருகிறார். கடை போட்டிருப்பதைப் பார்த்து கஸ்தூரி ஐஸ்வர்யாவிடம் உன்ன எப்படி எல்லாம் வாழ வைக்கனும்னு நெனச்சேன் ஆனா நீ இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்க என கூறுகிறார். பிறகு ஐஸ்வர்யா இட்லி சாப்பிடுறீங்களா சித்தப்பாவை தினமும் அனுப்பிவிடுங்க இட்லி கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார். இரு நான் போய் தனத்தை பார்த்துட்டு வரேன் என உள்ளே கிளம்புகிறார் கஸ்தூரி. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.